மெர்சல் படத்தில் விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை : இதுதான் காரணமாம்

விஜய் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த மெர்சல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப்புயல் வடிவேலு’ நடித்திருந்தார்.

இப்படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா தான். ஆனால் படத்தின் இயக்குனர் அட்லி கதை சொல்லும் போது ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிகா இப்படத்தில் நடிக்கவில்லை என கூறிவிட்டார்.

விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் 2001 ம் ஆண்டு வெளியான குஷி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனை மறுத்துவிட்டார்.

Advertisement

விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமர் இயக்கி வருகிறார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.