‘எம்.ஜி.ஆர் மகன்’ திரை விமர்சனம்
சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அந்தோணிதாசன் இந்த படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இந்த படம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

தேனி அல்லிநகரத்தில் சத்யராஜ் வைத்தியராக இருந்து வருகிறார். சத்யராஜின் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ கருப்பையா விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜ்க்கும் பழ கருப்பையாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை செல்கிறது. இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கிலுக்கு படிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் 12ம் வகுப்பிலேயே அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிறார். இதனால் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் சத்யராஜ்.
இறுதியில் அந்த மலையை கைப்பற்றினார்களா? இல்லையா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் அதை ஸ்டைலில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தையும் எடுத்துள்ளார். படத்தில் பாடல்கள். காமெடி சீன்ஸ் எதுவும் ரசிக்கும் படி இல்லை.
பொன்ராம் இயக்கிய முந்தையை படங்களில் காமெடி சீன்ஸ் நன்றாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒன்றும் இல்லை. பின்னணி இசை ஏற்கனவே பல படங்களில் கேட்ட இசைதான் நினைவுக்கு வருகிறது.
மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ ரசிக்க முடியவில்லை
