100 கி.மீ தூரம் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த சோகம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜத்தின் ராம் மற்றும் பிந்தியா தம்பதிகள் பணிநிமித்தமாக பஞ்சாபில் உள்ள லூதியானவில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் பிந்தியா கர்ப்பம் அடைந்தார். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பணமில்லாமல், வேலையில்லாமல் போனதால் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறப்பு ரயில்களில் ஊர் செல்ல ராம்- பிந்தியா தம்பதி முன்பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பீகாருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தனர்.

லூதியானவில் இருந்து பீகாருக்கு 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது 9 மாத கர்ப்பிணியான பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்து விட்டது.

Advertisement

லாக்டவுனால் வேலையிழந்த ராம் பணமில்லாததால் பிந்தியாவுக்கு சரியான சத்துள்ள உணவை அளிக்க முடியாமல் போனதும் 100 கி.மீ நடந்தே பயணித்ததால் பிந்தியாவின் உடல்நிலை பலவீனமடைந்ததும் இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.