விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் -29 பேர் உயிரிழப்பு

ஓடுபாதையை தவறவிட்டதால் சி-130 ஹெர்குலஸ் என்கிற போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் இன்று ராணுவ விமானத்தில் வந்தனர். விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்தது. ஆனால், தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை தவறவிட்டதால் சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியது.

விமானம் உடைந்து தீப்பிடித்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காணாமல் போன 17 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
tamil news today

விமானம் தரையில் மோதப்போகிறது என்பதை அறிந்த சில வீரர்கள், அவசரகால வாசல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் சி-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் உள்ள விமானப்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. பேரழிவு காலங்களில் நிவரணப் பொருட்களை கொண்டு செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்துகிறார்கள்.