பாலில் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராது. பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

இந்த பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

முதலில் இரண்டு பேரீச்சம் பழத்தை எடுத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

Advertisement

பிறகு பால் லேசாக ஆறிய பிறகு அதில் தேவையான அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். பிறகு பாலில் வேகவைத்த பேரிச்சம் பழத்தையும் சாப்பிட வேண்டும்.

இதனை இரவில் தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனை ஆண்கள் பெண்கள் என அனைவரும் குடிக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு ரத்தம் குறைவாக இருக்கும். அவர்கள் இதனை குடித்து வந்தால் அவர்களுக்கு இரத்தம் அதிகமாவதுடன் பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்கும்.

அதிக ரத்தப்போக்கு

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். அவர்கள் இந்த பேரிச்சம் பழம் வேக வைத்த பாலை குடித்தால் முறையற்ற மாதவிலக்கு சரிசெய்யும்.

எலும்புகள் வலுவாக

பேரிச்சம்பழம் வேகவைத்த பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். குறிப்பாக எலும்பு தேய்மானத்தை தடுக்கும். சோம்பேறித்தனத்தை நீக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நரம்பு தளர்ச்சி

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இருக்காது. அவர்கள் இந்தப் பாலை குடித்து வந்தால் நரம்பு மண்டலம் சீராகும். மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும். தாம்பத்திய உறவில் ஆர்வம் ஏற்படும்.

சளி, இருமல் உள்ளவர்கள், வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை குடிக்கலாம்.

ஆல்கஹால் அதிகம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இதனை அடிக்கடி குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ரத்த அழுத்தம் சரியாகும்.