தளபதி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மிஷ்கின்

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். விஜயுடன் பூஜா ஹெக்டே, டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு வெளிநாடு சென்று ஆக்சன் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

cinema news in tamil

‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக டைரக்டர் மிஷ்கின் நடிக்க இருந்ததாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மிஷ்கினைத் தான் அழைத்தார்களாம். முதலில் சம்மதித்த மிஷ்கின் பிறகு ‘பிசாசு-2’ படத்தை இயக்க வேண்டி இருந்ததால் தேதிகளை ஒதுக்க முடியாமல் விலகிக் கொண்டததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பிறகுதான் மிஷ்கினுக்கு பதிலாக செல்வராகவன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement