பறிக்கப்பட்ட உயிர்கள்..! நீதி வழங்க வேண்டும்..! ஸ்டாலின் பளார்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்காக தந்தை மற்றும் மகன் அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து, மகன் மற்றும் தந்தையும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வைகோ உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.