குழந்தைகள் செல்போனை அதிகம் பயன்படுத்தினால் என்ன ஆகும்..?

தற்போது பிறக்கும் குழந்தைகள் அனைவரும், செல்போன் மற்றும் டேப்லேட் போன்ற கருவிகளில் புகுந்து விளையாடுகிறார்கள். ஆனால், அது அவர்களின் உடலுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். இதுதொடர்பான பாதிப்பை தற்போது பார்க்கலாம்.

செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு:

ஒரே இடத்தில் அமர்ந்துக் கொண்டு குழந்தைகள் வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது என்று இருப்பது அவர்களின் முதுகுத் தண்டு பாதிப்படைவதற்கு வழிவகுக்கும். மேலும், தூக்கம் வராமை போன்ற பிரச்சனைகளும் குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

Advertisement

குழந்தைகள் தொடர்ந்து தொடுதிரையை தொட்டுக் கொண்டே இருப்பதால், அவர்களது விரல்கள் பலவீனம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் அந்த வயதில் பெறுவதற்கான பலம், தொடுதிரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கிடைக்காமல் போய்விடும். இதனால், எதிர்காலத்தில் தேர்வு எழுதுவதற்கு அவர்களின் உடல் ஒத்துழைக்காது என்றும் மருத்துவர்கள் அதிர வைக்கின்றனர்.

வீட்டுக்குள் அமர்ந்துக் கொண்டு தொடர்ந்து 2-ல் இருந்து 3 மணி நேரத்திற்கு செல்போன் பயன்படுத்தி வருவதால், குழந்தைகள் வெளியில் விளையாட சொல்லமல் இருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மிகவும் சாதாரணமாக கிடைக்கும் வைட்டமின்களும் கிடைக்காமல் போய்விடுகிறது. அதாவது, அவர்கள் வயதில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த விஷயமும் இந்த செல்போன்களால் கிடைக்காமல் போய்விடுகிறது.

இதுமட்டுமின்றி, உளவியல் ரீதியான சில பிரச்சனைகளையும் குழந்தைகள் சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம். அதாவது, குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழக மாட்டார்களாம். வீடியோ கேம் விளையாடுவதை தடுத்தாலோ, அதிக கோபம் வரும் அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் பார்க்க முடியும்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில், குழந்தைகளுக்கு செல்போன் தருவதை தவிர்த்துவிட்டு, அவர்களுடன் பழகி வாருங்கள். மேலும், குழந்தைகள் முன்பு செல்போன் பயன்படுத்துவதை தவிருங்கள். இதுவே ஆரோக்கியமான தலைமுறை வருவதற்கு வழிவகுக்கும்.