தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்? அமைச்சர் கொடுத்த விளக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் சிக்கி தவித்த உலக நாடுகள் மெல்ல மெல்ல விடுப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு வைரஸ் நோய் தற்போது பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டனில் குரங்கு அம்மை வைரஸ் தொற்று நோய் பரவி வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

தற்போது தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது “மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் பணிபாற்றும் 4,800 நர்ஸ்களுக்கான ஊதியம் 14 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரங்கு காய்ச்சல் பரவவில்லை; எனவே மக்கள் யாரும் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.