in

“மூக்குத்தி அம்மன்” படம் ரிலீஸ் எப்போது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

first look poster of Mookuthi Amman

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னதாகவே முடிந்து விட்டது. படத்தை மே 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளிவரவில்லை.

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி “மூக்குத்தி அம்மன்” படத்தின் ரிலீஸ் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “கொரோனா அச்சுறுத்தல் தணிந்து உலகம் எப்போது பாதுகாப்பானதாக மாறுகிறதோ, மக்கள் அனைவரும் பயமின்றி எப்போ குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும். இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு பண்ணிட்டோம்” என கூறினார்.