பழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை

சீனாவில் பழுதடைந்த லிப்டில் நான்கு நாட்களாக சிக்கி தவித்த தாய் – மகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சீனாவில் நான்கு மாடி குடியிருப்பில் தாயாரும் மகளும் வசித்துவந்தனர். இருவரும் மாடிக்கு லிப்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதடைந்தது.

இதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர். உதவிக்கு யாரும் இல்லாததால் சுமார் 96 மணி நேரம் லிப்டில் கிடந்துள்ளனர்.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போன அவர்கள் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்துள்ளனர்.

பிறகு மீட்பு குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டு ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தாயும் மகளும் வீடு திரும்பினர்.