in

வரதட்சனை கேட்ட மாமியார்… கொந்தளித்த மருமகள்.. போலீசார் அதிர்ச்சி…

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மணியம்பள்ளத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரதீபா தம்பதி, இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து 9மாத குழந்தை ஒன்று உள்ளது.

பிரதீபாவிற்கும் அவரது மாமியார் ராஜம்பாளிற்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் ராஜம்பாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார், அப்போது அவர் மீது ஐந்து லிட்டர் மண்ணெண்ணெயை ஊற்றி அவரது மருமகள் பிரதீபா தீ வைத்துள்ளார்.

pudukkottai news in tamil

இச்சம்பவத்தால் 90 சதவீதம் தீக்காயமடைந்த ராஜம்பாள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் இன்று உயிரிழந்தார். மாமியாருக்கு தீவைத்த மருமகள் பிரதீபாவை வல்லத்திராகோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

pudukkottai news in tamil

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வரதட்சணைக் கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் இடையூறு செய்ததாகவும் அதனால் தனது மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டு அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் பிரதீபா கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக மாமியாரை மருமகளே மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

chennai weather news tamil

வருகிறதா அடுத்த புதிய புயல்… சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

meesaya murukku heroine photos

Actress Aathmika Hot Photos