கொரோனா கொடுத்த பாதிப்பு தெரியும்… நன்மை தெரியுமா..?

கொரோனாவால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன, பலரும் வேலை இழந்து வறுமைக்கு உள்ளாகினர். சிலர் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். இவ்வாறு பலதரப்பட்ட தீமைகளை கொடுத்துவந்த கொரொனா, இயற்கைக்கு நல்ல நண்பனாக இருந்து வருகிறது.

இவ்வாறு, நேபாலி டைம்ஸ் என்ற பத்திரிக்கை அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இமயமலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது. அதனால், இமயமலை 200 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்க்கும்போதும் மிகத்தெளிவாக தெரிகிறது.

Advertisement

இதனால் அப்பகுதி மக்கள் இமயமலையை 200 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கண்டு மகிழ்கின்றனர்.