மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, ஆர்.ஜே பாலாஜி, ரோபோஷங்கர் என பலரும் நடித்துள்ளனர். எம்.ராஜேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

பொதுவாக ராஜேஷ் படம் என்றாலே அதில் கதை இருக்காது. ஆனால் காமெடி நிச்சயம் உண்டு. இந்த படத்தில் அதுவும் பெரிதாக சொல்லும் படி இல்லை. சிவகார்த்திகேயன் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை.

சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். டிவி சீரியல் தயாரிப்பாளராக நயன்தாரா வேலை பார்த்து வருகிறார். சிவகார்த்திகேயனின் அம்மாவாக வரும் ராதிகவுக்கு ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க ஆசை. அப்போது ராதிகாவ அழைத்துக்கொண்டு செல்லும் போது நயன்தாராவின் காரை இடித்து விடுகிறார். பிறகென்ன வழக்கம் போல முதலில் மோதல் பிறகு காதல்.

Advertisement

படத்தில் யோகிபாபு, ஆர்.ஜே பாலாஜி, ரோபோஷங்கர் என பலர் இருந்தும் காமெடியில் எதோ குறை இருப்பதுபோல் தோன்றுகிறது. பின்னணி இசை என்ற பெயரில் ஏற்கனவே அரைத்த மாவை திருப்பி அரைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா. இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ போகிறது.

நல்ல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் ஒரு பெரிய தோல்வி என்றே சொல்லலாம். நயன்தாரா எப்படி இந்த கதைக்கு ஓகே சொன்னார் என்று தெரியவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டரை மணி நேரம் படம் ஓடுகிறது. படம் நன்றாக இருக்கும் என நம்பி போன ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.