மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 3584 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 300 பேருந்து மட்டும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகிறது. பிற பேருந்துகள் பணிமனையில் ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தியுள்ள பேருந்துகளில் 1775 பேருந்துகளில் HFC and HC ஜூன் 2020-ல் முடிவடைகின்றன. எனவே பேருந்துகளுக்கு fitness certificate வாங்க வேண்டி உள்ளதால் MTC (W), FC Unit, RC Unit-களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதாவது 50 சதவீதம் அடிப்படையில்.

பணிக்கு வரும் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
- ஊழியர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்
- கையில் உறை அணிந்து இருக்க வேண்டும்
- கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்
- கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும்
- தொழில் கூடங்கள், கேண்டின், ஓய்வறை, நேரக் காப்பாளர் அறை, பண்டக சாலைகளில் போன்ற இடங்களில் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும்
- பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்
இவ்வாறு அறிவிப்பு கூறப்பட்டுள்ளது.