Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

mudakathan keerai uses in tamil

மருத்துவ குறிப்புகள்

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

கீரை வகைகள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு பல சத்துகளை தருகிறது. ஆனால் சில கீரைகளின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அப்படி பல பேருக்கு தெரியாமல் இருக்கும் கீரை தான் முடக்கத்தான் கீரை.

ஆண்களுக்கு விரைப்பைகளில் நீர் கோர்த்து வியாதி ஏற்படும், இந்த வியாதியால் தினந்தோறும் அவதிப்படும் நிலை ஏற்படும். அந்நேரத்தில் தினந்தோறும் முடக்கத்தான் கீரையின் இலைகளை விரைப்பையின் மீது வைத்து துணியால் கட்டு போட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஜலதோஷம்

ஜலதோஷம் மற்றும் தலைவலியின் போது முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி, வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.

தலைமுடி பிரச்சனை

தலைமுடி எப்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் சிலருக்கு தலையில் பொடுகு வருவதினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனைகள் வராமல் இருக்க முடக்கத்தான் இலைகளினால் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணையை தலையில் தடவி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.

புற்றுநோய்

புற்று நோயாளிகளுக்கு உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டியிருக்கும். அதன் அதிகரிப்பை தடுக்க முடக்கத்தான் கீரையை சாப்பிட வேண்டும். தொடந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும்.

வாத பிரச்சனை

முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் உடலில் இருக்கும் வாதத் தன்மை குறையும், உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியை போக்கும். மேலும் முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணெயில் நனைத்து அனைத்து மூட்டு பகுதிகளிலும் தேய்த்தால் மூட்டு வலி குணமாகும்.

காது வலி

காலநிலை மாற்றங்களாலும், வேறு சில காரணங்களாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காது வலி ஏற்படுகிறது. காது வலி ஏற்படும் போது முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து, சாறு போல் ஆக்க வேண்டும். அந்த சாற்றின் சில துளிகளை காதுகளுக்குள் விட்டால் காது வலி குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் நல்ல மருந்தாக இருந்து வருகிறது. முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து குழந்தை பெற்ற பெண்கள் அடிவயிறில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும்.

தோல் வியாதி

தோல் வியாதிகளுக்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்தாக இருந்து வருகிறது. மேலும் சொறி, சிரங்கு போன்ற வியாதிகள் இருந்தால் முடக்கத்தான் கீரையை அரைத்து உடம்பில் தேய்த்தால் சில நாட்களில் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் குணமாகும்.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top