முதல் நீ முடிவும் நீ திரை விமர்சனம்
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிப்பில் தர்புகா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் முதல் நீ முடிவும் நீ. அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கிடாரி, பலே வெள்ளையத்தேவா, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மேலும் படத்திற்க்கு இசையமைத்துள்ளார்.
11 ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை. பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை செல்கிறது. இதில் கிஷன் தாஸ், அமிர்தா மாண்டரின் இருவரும் காதலர்கள். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் மற்றொரு பெண் எட்டிப் பார்க்க பிரச்சனை ஆரம்பமாகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

90களில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களோடு படம் நகர்கிறது. நாயகன் கிஷன் தாஸ் நண்பர்களோடு அரட்டை அடிப்பது, காதல் என கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்து கொடுத்துள்ளார்.
சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ். படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறார். நாயகியாக வந்த அம்ரிதா (அனு) கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஆனால் பின்னணி இசை படத்திற்கு பொருந்துகிறது.
முதல் பாதி எதார்த்தமாக செல்கிறது. இரண்டாம்பாதி சற்று மந்தமாக செல்கிறது. ஒரு சில காட்சியில் இயக்குனர் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
