முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

முள்ளங்கியில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. ஆனால் பலர் இதனை விரும்பி சாப்பிடுவதில்லை. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கியை விட வெள்ளை முள்ளங்கியில்தான் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.

radish health benefits in tamil

முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

கோடை காலத்தில் முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

முள்ளங்கி சாறு மூல நோயை குணப்படுத்தும். முள்ளங்கியை நன்றாக வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் முழுவதுமாக கரையும்.

முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக வைக்கும்.

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்

மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும் பித்தப்பையினை சரி செய்யும்.

முள்ளங்கியில் அதிகளவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மூலநோய், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

முள்ளங்கியை சேர்த்துக்கொள்வதால் சிறுநீர் நன்கு வெளியேறும். இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.

முள்ளங்கிக்காயை போல் முள்ளங்கி கீரையிலும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Recent Post