மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – வைரலாகும் சம்பவம்

மும்பையை சேர்ந்த ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த போது அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

ரூ. 396 மதிப்புள்ள கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த அவருக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் கிடைத்திருக்கிறது. தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement