in

100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் புயல் தாக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை.

லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது.

இந்த நிசர்கா புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

மும்பைக்கு செல்லும் விமானங்கள் மற்றும் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையில் நேற்று நள்ளிரவு முதல் நாளை பிற்பகல் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Corona Tamil News

எச்சரிக்கை… 60 வயது கடந்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா…

Corona Virus tamil news

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் எடுத்த கொரோனா பரிசோதனைகள் எவ்வளவு? – ஐசிஎம்ஆர் அறிவிப்பு