லியோ முடிச்ச கையேடு அடுத்த படத்திற்கு ரெடியாகும் மிஷ்கின் – தயாரிப்பாளர் ரெடி!

இயக்குநர் வின்சென்ட் செல்வா அவர்களிடம் உதவி இயக்குனராக தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் தான் இயக்குனரும் நடிகருமான மிஸ்கின். தளபதி விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான யூத் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.
அதன்பிறகு 2006ம் ஆண்டு மிஸ்கின் அவர்களுடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சித்திரம் பேசுதடி. இதனை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் மற்றும் முகமூடி என்று பல நல்ல திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்தவர் மிஷ்கின்.
இவருடைய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்கள் மிகச் சிறந்த இயக்கத்திற்கு பெயர் பெற்ற திரைப்படங்கள் என்றால் அது மிகையல்ல. அவ்வப்போது தனது படங்களில் நடித்து வரும் மிஸ்கின் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களுடைய தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் அதற்கான கதையை எழுதி வருவதாகவும் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.