‘நாங்க வேற மாறி’ வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்றிரவு 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Valimai First Look Poster HD

Advertisement

சில வாரங்களுக்கு முன்னர் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது. வலிமை படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாடு செல்ல உள்ளனர். இந்நிலையில் வலிமை படத்தின் “நாங்க வேற மாறி” என்கிற முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியானதால் அஜித் ரசிகர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.