ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் திருட முயன்ற போது வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்

நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வட மாநில இளைஞர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற போது, அந்த இளைஞர் எலி போல வசமாக சிக்கிக் கொண்டார். பிறகு அந்த வட மாநில இளைஞரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் மோகனூர் அருகே தனியாருக்கு சொந்தமான கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கும் வலி பார்ப்பவர் என்றும் தெரியவந்தது.
28 வயதான அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.