தேர்தல் பரப்புரையில்”வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனமாடிய நமீதாவும்-வேட்பாளரும்..!

தமிழகத்தில் நடைபெறவிருக்கு சட்டமன்ற தேர்தலுக்கு, அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வரிசையில் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் பாஜக.வேட்பாளர் வானதி சீனிவாசன் அங்கு பிரசராம் மேற்கொண்டார்.

அவருடன் நடிகையும், பாஜக வேட்பாளருமான நமீதாவும் அங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார், இந்த பரப்புரையை வீடியோ எடுத்துக் கொண்டு வந்த பாஜக கட்சி இளைஜர்கள் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்பட்டத்தில் இருந்து வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ஆடியுள்ளனர்.

அதன் பின்பு இதே பாடலுக்கு நடிகை நமீதா, வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்துள்ளார். இந்த தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகுது. மேலும் வானதி சீனிவாசனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”வாத்தி கம்மிங்” என்று குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.