நண்பன் படத்தின் காப்பியா டான்? – தீயாய் பரவும் தகவல்

‘டாக்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.

1999ல் எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் சிம்ரன் பேசிய ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் இடம்பெற்றுள்ளது. எஸ்ஜே சூர்யா பேசும் அதே வசனத்தை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

டான் படம் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் காப்பி என இன்னோரு தகவலும் பரவி வருகிறது.