Search
Search

நவரசா விமர்சனம் : அரவிந்த்சாமியின் புராஜெக்ட் அக்னி

அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரான் எத்தன் யோஹன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அரவிந்த்சாமி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். தனது கண்டுபிடிப்பை பற்றி பேசுவதற்கு தனது நண்பரான பிரசன்னாவை அழைக்கிறார். தான் ஒரு அதிசயமான விஷயத்தை கண்டுபிடித்தாக கூறுகிறார். அவர் கண்டுபிடித்தது என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

navarasa review in tamil

விஞ்ஞானியாக வரும் அரவிந்த் சாமி நடிப்பில் அசத்தியுள்ளார். பூர்ணா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். பிரசன்னா எதார்த்தமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

ஆச்சரியம் என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘புராஜெக்ட் அக்னி’ நவராசாவில் தனித்து நிற்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் அற்புதம். அதே போல் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அற்புதம்.

You May Also Like