நவரசா விமர்சனம் : ரித்விகா நடித்த ரௌத்திரம்

ரித்விகா நடித்திருக்கும் இந்த படத்தை அரவிந்த் சாமி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஸ்ரீராம், தங்கை மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பம் வறுமையில் இருந்தாலும் சந்தோசமா வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் பணம் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு ஸ்ரீராமின் தாயார் செல்கிறார்.

பணம் வாங்கிக் கொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாகிறது. ஒரு நாள் தனது தாயாருக்கு பணம் எப்படி கிடைத்தது என ஸ்ரீராமுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் ஸ்ரீராம், கோபத்தின் உச்சிக்கு சென்று விடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

Advertisement

பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்விகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.ஸ்ரீராமுக்கு அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் அதனை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அழகம் பெருமாள், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

‘கோபம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் அரவிந்த் சாமி. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்க்கிறது.