4 மொழிகளில் வெளியாகிறது நயன்தாரா படம். அதுவும் ஒரே நாளில்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தற்போது ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார். ‘அவள்’ படத்தின் இயக்குனரான மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

tamil cinema news

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் நடிகை நயன்தாரா, கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட உள்ளனர்.