உயிரே.. எங்கள் உலகமே – தங்களது இரு குழந்தைகளின் பெயரை வெளியிட்ட நட்சத்திர ஜோடி

மலையாள மொழியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தற்பொழுது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளவர் தான் நயன்தாரா. இவருடைய இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதை நாம் அறிவோம்.
1984ம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர், மலையாள மொழியில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பிறகு 2005ம் ஆண்டு இவருக்கு தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பு தான் ஐயா. அந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் இரண்டாவதாக நடித்ததே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜோடியாக என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அதிக அளவில் நடத்து வருகிறார். தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்னுடைய நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2022ம் ஆண்டு திருமணமான நிலையில் வாடகை தாய் மூலம் இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர் இந்த ஜோடி. தற்பொழுது அந்த குழந்தைகளின் பெயரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.
உயிர் ருத்ரோநீல் N சிவன்
உலக் தெய்விக் N சிவன் என்பது தான் அந்த குழந்தைகளின் பெயர்கள்.