நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் காதலர்களாக மாறினார்கள். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியிருந்தார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸின் போது திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள். தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமணம் வரும் ஜுன் 9ம் தேதி நடைபெறும் என தகவல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

Advertisement

இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க உள்ளதாம்.