தஞ்சாவூர் நீலமேகப் பெருமாள் கோயில்

ஊர்: தஞ்சாவூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : நீலமேகர்

தாயார் : செங்கமலவல்லி

ஸ்தலவிருட்சம்: மகிழம்

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: வைகாசியில் 18 கருடசேவை திருவிழா

திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

தல வரலாறு

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் இருந்து அமிர்தத்தை, மணிமுத்தா நதியில் கலந்து அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்தார். அந்த சமயம் சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் என்ற மூன்று கொடிய அசுரர்கள், அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களையும் பராசரையும் துன்புறுத்தி வந்தனர்.

அந்த அசுரர்களிடம், இந்த தீய குணங்களை விட்டுவிடும்படி பராசரர் கேட்டுக் கொண்டார். அந்த அசுரர்கள் கேட்பதாக இல்லை. எனவே மகரிஷி சிவனிடம் அவர்களை அழிக்கும் படி வேண்டினார். சிவன், காளி தேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும் உயிர் பெற்ற அசுரர்கள், முனிவர்களை துன்புறுத்தினார்கள். இதை கண்டு மனம் கலங்கிய பராசரர் பெருமாளிடம் வேண்டினார்.

அப்போது பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து தஞ்சகணை அழித்தார். ஆதலால் இவ்வூர் “தஞ்சமாபுரி’ எனப் பெயர் பெற்றது. இதைக்கண்ட தண்டகன் பூமியை பிளந்து தப்பித்து சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரத்தில் பூமிக்கு அடியில் சென்று தண்டகனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்தார் . அதன் பின் நீலமேகப் பெருமாளாக பராசருக்கு காட்சி கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் நிறுவப்பட்டது. அசுரர்களை அழித்த பெருமாள் நிலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீர நரசிம்மர் என மூன்று வெவ்வேறு கோயில்களில் காட்சி கொடுக்கிறார்.

திருமங்கையாழ்வார், இம்மூவரையும் சேர்த்து ஒரே திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்துள்ளர். வீர நரசிம்மர் கோயிலில் பெருமாள் சக்கரத்தாழ்வார் ஆக உள்ளார். தீய குணம் படைத்தவர் இங்கு வந்து வணங்கினால் மனம்மாறி நர்குணம் ஏற்படும் என கூறப்படுகிறது.

நரசிம்மரின் இருபுறமும், இரண்யகசிபு, பிரகலாதன் உள்ளனர். அசுரனை அழித்த நரசிம்மர் கோபத்துடன் இருந்தார். எனவே லட்சுமி இங்கு வாசம் செய்யவில்லை. ஆகவே கோபம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

Recent Post

RELATED POST