Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

மருத்துவ குறிப்புகள்

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்

வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலை ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சரும பிரச்சனைகளை சரி செய்வதில் வேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரம்பரிய மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது பல நோய்களை தீர்க்கும்.

வேப்பிலை, நெய், தேன் இவை மூன்றையும் சேர்த்து புகைமூட்டம் போட்டால் காய்ச்சல் உடனடியாக நீங்கும்.

வேப்பமர பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் வரும் நுரையை தீப்புண்கள் மீது தடவினால் அந்த தீப்புண்கள் விரைவில் ஆறும்.

வேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருபவர்களுக்கு பல்வலி, பல் பிரச்சினைகள் வராது. வேப்பம் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வேப்பம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் குஷ்ட நோய்கள் குணமாகும்.

veppilai benefits in tamil

வேப்பிலையோடு பெருங்காயம் சேர்த்து அரைத்து காயங்களில் பூசினால் காயங்கள் மிக விரைவாக ஆறும். வேப்ப எண்ணெயை சூடுபடுத்தி தடவினாலும் புண்கள் விரைவில் ஆறும்.

வேப்பங்கொழுந்துடன் துளசி சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இருவேளையும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அலர்ஜி நோய் குணமாகும்.

வேப்பிலையை நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் ரத்த சோகை குணமாகும்.

நிலவேம்பு, கிராம்பு, வேப்பமரப்பட்டை மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 200 மில்லி கிராம் அளவு குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும்.

வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் தலையில் உள்ள பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்பமரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து அதில் 2 ஸ்பூன் உப்பு மற்றும் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

முகப்பரு உள்ள இடத்தில் வேப்பிலையை அரைத்துப் பூசினால் முகப்பரு வேகமாக மறையும்.

வேப்பிலையை வேகவைத்த தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

வேப்ப மரத்தின் பூக்களை ரசம் வைத்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

3 டம்ளர் நீரில் 7 வேப்பிலைகளை போட்டு ஒரு டம்ளராக வரும்வரை நன்றாக கொதிக்கவைத்து, அதனை காலையிலும் மதிய வேளையிலும் தொடர்ந்து குடித்து வந்தால் மலேரியா குணமாகும். சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு குடிக்கவேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் 4 வது மற்றும் 5 வது மாதங்களில் வேப்பிலை சாப்பிடக்கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் என்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top