“ஏன் இந்த ஓரவஞ்சனை”.. விருது வழங்கும் விழா.. நெல்சனுக்கு நடந்த சம்பவம் – கொதிக்கும் ரசிகர்கள்

எத்தனை ஹிட் படங்கள் தொடர்ச்சியாக கொடுத்து வந்தாலும், ஒரே ஒரு பிளாப் திரைப்படத்தை கொடுத்தால் போதும் அந்த இயக்குனருக்கு இருக்கும் மதிப்பு பெரிய அளவில் குறைந்துவிடும். இது தமிழ் சினிமாவிற்கு மட்டும் அல்ல இந்திய சினிமாவிற்கே பொருந்தும்.
இதை நிரூபிக்கும் அளவில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது, கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என்ற இரு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலிப்குமாரின் பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை கண்டாலும் விமர்சனம் ரீதியாக பெரும் சரிவை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய வெற்றியை ஒப்பிட்டு நெல்சனை இணையத்தில் பலர் கேலி செய்து வருகின்றார். இந்நிலையில் விகடன் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நெல்சன் மற்றும் லோகேஷ் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இருவரும் அங்கு வந்த நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு அவர் உள்ளே செல்லும் வரை அளிக்கப்பட்ட பாதுகாப்பு நெல்சனுக்கு அளிக்கப்படவில்லை. அவர் உள்ளே சென்றபோது பின்னல் இருந்து ஒரு பவுன்சர் அவர் செல்ல வேண்டிய வழியை அங்கிருந்தே காட்டிவிட்டு அங்கிருந்து செல்கின்றார்.
இது உண்மையில் அவரை சங்கடனிலைக்கு தள்ளும் ஒரு நிகழ்வாகத்தான் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.