நெஞ்சம் மறப்பதில்லை திரை விமர்சனம்

எஸ் ஜே சூர்யா, ரெஜினா கசான்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பணக்கார தம்பதியான ராம்சே(எஸ்ஜே சூர்யா), ஸ்வேதா (நந்திதா ஸ்வேதா) இவர்களுக்கு ரிஷி என்ற 4 வயது மகன் உள்ளார். அந்தப் பையனை கவனித்துக் கொள்வதற்காக ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த மரியம் (ரெஜினா கசான்ட்ரா) வேலையில் சேருகிறார்.

எஸ்ஜே சூர்யாவுக்கு ரெஜினாவை பார்த்ததும் காம உணர்வு ஏற்படுகிறது. அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் ரெஜினா விலகி விலகி செல்கிறார். ஒரு கட்டத்தில் எஸ் ஜே சூர்யா அவரை கொலை செய்கிறார். இதனால் அவரை பழிவாங்குவதற்காக ரெஜினா ஆவியாக வருகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

Advertisement

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் பல தடைகளைக் கடந்து இன்று வெளியாகியுள்ளது.

பேய் படமா.. அட போங்க பாஸ் இந்த மாதிரி நிறைய படம் பார்த்தாச்சு என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை படம் அப்படி அல்ல. ஏனென்றால் செல்வராகவன் தனது ஸ்டைலில் இயக்கியுள்ளார்.

பழிவாங்கும் கதை பழைய ஃபார்முலாவாக இருந்தாலும் அதனை பயன்படுத்திய விதம் அருமை. எஸ் ஜே சூர்யா தனது நடிப்பால் மிரட்டுகிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அரவிந்த் கிருஷ்ணா தனது வண்ணங்கள் மற்றும் பிரேம்கள் மூலம் வித்தியாசமான படத்தின் மனநிலையை நம்மிடம் கொண்டு வருகிறார்.

ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா இருவரும் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்று அலுப்பு தட்டுகிறது.