நெஞ்சு சளி குறையவே இல்லையா? இந்த ஒரு டீயை அடிக்கடி குடிங்க

குளிர்காலத்தில் நிறைய பேர் சளி பிரச்சனையால் அவதிப்படுவார்கள். ஏற்கனவே ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளைக் கொண்டவர்கள் குளிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். மூலிகை மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு டீக்களை தயாரித்து நெஞ்சு சளியை குறைக்கலாம்.

ஆறு துளசி இலைகளை எடுத்து 1 கப் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து தினமும் காலையில் இதனை குடித்து வர வேண்டும்.

துளசியில் ஆன்டி-பாக்ரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டைப் புண் மற்றும் சளியைக் குறைக்க உதவுகிறது.

Latest Articles