in

விஜய்க்கும் நெப்போலியனுக்கும் இப்படியொரு பிரச்சனையா..? அவரே கொடுத்த பேட்டி..!

சீவல பேரி பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்தவர் நடிகர் நெப்போலியன். இதையடுத்து, பல்வேறு படங்களில் நடித்த இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர், தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் வீடியோ கால் மூலமாக நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றை அளித்தார்.

அதில், தனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது என்றும், நான் விஜய் படங்களை பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், விஜயின் வளர்ச்சியை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறிய அவர், விஜய் உழைப்பால் தான் உயர்ந்து வந்தார் என்று குறிப்பிட்டார்.