கொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா

கொரோனா தேவி சிலை வனிதா விஜயகுமாரை போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருவதை பார்த்து கடுப்பாகியிருக்கிறார் நடிகை வனிதா விஜயக்குமார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வழிபட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா தேவி சிலை நடிகை வனிதா விஜயகுமாரை போல இருப்பதாக கூறி இரண்டு புகைப்படங்களையும் இணைத்து கலாய்த்து வருகின்றனர். இதை பார்த்த நடிகை வனிதா எல்லோரும் ஏன் இதை எனக்கே ஷேர் செய்கிறீர்கள்” என கடுப்பாகி கேட்டுள்ளார்.

Advertisement