சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள படம் டான். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கல்லூரியில் ரகளை செய்யும் மாணவராக சிவகார்த்திகேயன் அந்த ட்ரைலரில் காட்டப்படுகிறார்.
அந்த ட்ரைலரில் ‘ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி’ என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக்கொண்டிருப்பார்.
Advertisement
சமீபத்தில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முற்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
நிலைமை இப்படி இருக்கும் போது அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இப்படி படம் எடுத்திருப்பது சரியா? என நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை திட்டி வருகின்றனர்.