நயன்தாராவின் நெற்றிக்கண் திரைவிமர்சனம்

நயன்தாரா மற்றும் அஜ்மல் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நெற்றிக்கண் வெளியாகியுள்ளது. 2011 -ஆம் ஆண்டு சௌத் கொரியன் படமான ‘Blind’ என்கிற மெகா ஹிட் படத்தின் தழுவலாக இந்த நெற்றிக்கண் உருவாகியுள்ளது.

சிபிஐ ஆபீசராக இருக்கும் நயன்தாரா எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் தன் பார்வையை இழக்கிறார். இதனால் மீண்டும் பணியில் சேர முடியாமல் போகிறது.

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் இருக்கும் நயன்தாராவை அஜ்மல் கடத்த முயற்சி செய்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் நயன்தாரா அவரைப் பற்றிய தகவல்களை காவல்நிலையத்தில் கொடுக்கிறார். அதன் பிறகுதான் அஜ்மல் ஏற்கனவே பல பெண்களை கடத்தியவர் என்பது தெரியவருகிறது. பிறகு நயன்தாரா உதவியுடன் அஜ்மலை பிடிக்க போலீஸ் எடுக்கும் முயற்சிதான் படத்தின் கதை.

Advertisement

நயன்தாரா பார்வையற்ற வேடத்தில் நன்றாக நடித்துள்ளார். கொடூர வில்லனாக வரும் அஜ்மல் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். நாம் சைக்கோ வில்லன்களை பல படங்களில் பார்த்து பழகியதால் அலுப்பு தருகிறது.

netrikann movie review in tamil

படத்தின் மிகப்பெரிய பலமே நயன்தாராதான். R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. திரைக்கதை நீளமாக செல்கிறது. படத்தின் முதல் பாதி நன்றாக செல்கிறது. இரண்டாம் பாதியில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம். மொத்தத்தில் நெற்றிக்கண் படம் நயன்தாராவின் நடிப்பிற்காக ஒரு முறை பார்க்கலாம்.