உடற்பயிற்சி பண்ணியாச்சா? அதுக்கு அப்புறம் இதை செய்யாதிங்க…

உடற்பயிற்சியின் நோக்கமே ஆரோக்கியமாகவும், கட்டுமஸ்தாகவும் இருக்கதான். அதனை முறையாக செய்தால்தான் அதற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய வேண்டாதவை என சில உண்டு. அவைகளை உங்களது பயிற்சியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த கட்டுரையும் உங்களுக்கு பலன் அளிக்கும்.

சத்துள்ள உணவு

அதிக புரோட்டின் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவை தசைகளை வளர்க்க உதவும். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குளிர் பானங்கள்

உடற்பயிற்சி செய்த பிறகு உடல் சற்று கலைப்பாக இருக்கும், அதற்கு சுத்தமான தண்ணிர் அருந்துவது மிகவும் நலம். மாறாக குளிர்ச்சியான சர்க்கரை கலந்த குளிர்பானங்களை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். காரணம், இவை உடலில் மீண்டும் கலோரிகளை அதிகரித்துவிடும்.

தண்ணிர் குடிக்கணும், ஆனா.. குடிக்க கூடாது

உடற்பயிற்சி முடித்த உடனே தண்ணிர் குடிக்க வேண்டாம். உடற்பயிற்சி முடிந்து 10 நிமிடம் கழித்து தண்ணிர் அருந்த வேண்டும். ஏனென்றால், உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்த அழுத்தம் அதிகமாகவும், இதயம் வேகமாகவும் இயங்கும், அவை சாதராண நிலைக்கு திரும்ப 5 அல்லது 10 நிமிடமாவது ஆகும், பின்னர் தண்ணிர் அருந்த உடலுக்கு நலம் பயக்கும்.

உடற்பயிற்சி உடை..

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு அணிந்திருந்த உடையை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால், பயிற்சியின் போது வியர்வை வெளியேறும், வெகுநேரம், அந்த உடையுடன் இருந்தால் பாக்டிரியாக்கள், பூஞ்சைகளின் மூலம் சருமத்தில் நோய் தொற்று எற்ப்பட வாய்ப்புண்டு.

சீஸ் வேண்டாம்

உடற்பயிற்சி முடித்த பிறகு, சீஸ், பர்கர், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இவற்றில் உள்ள கொழுப்பு உடலின் எடையை அதிகரிக்க செய்யும்.

ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்…

உடற்பயிற்சிக்கு பின் ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும், இதில் சர்க்கரை இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.

முட்டை…

பயிற்சிக்கு பின் முட்டையை அவித்து உண்ணலாம், ஆனால் அதனை பொரித்தோ அல்லது ஆம்லேட் செய்தோ சாப்பிட வேண்டாம்.

வெள்ளை நிற பிரெட்…

வெள்ளை நிற பிரெட் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம், வேண்டுமென்றால் ஒன்று அல்லது இரண்டு எடுத்துக் கொள்ளலாம். இதில் ஸ்டார்ச் உள்ளதால் அவை வேகமாக சர்க்கரையாக மாறக்கூடியது.

ஷவரில் குளிப்பது…

உடற்பயிற்சி முடித்தவுடன் சிறிது நேரத்திற்குள் குளித்துவிடுவது நல்லது. வியர்வையின் மூலம் வெளியேறும் பாக்டிரியாக்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால், ஷவரில் குளிக்காமல், குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

Recent Post