கேப்டன் மில்லர்.. படத்தில் இணைந்து மிரட்ட வரும் புதிய நடிகர் – வெளியான சூப்பர் அப்டேட்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சென்ற ஆண்டில் இருந்தே இந்த படத்திற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது, மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஃபேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சுதீப் கிஷன், கன்னட உலகின் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைக்கவிற்பது பிரபல நடிகரும் இசையமைப்பாளருமாக திகழும் ஜி.வி பிரகாஷ் அவர்கள் தான்.
பிரியா மோகன் இந்த படத்தில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே, மேலும் 1940களில் நடக்கும் சம்பவங்களை ஒன்றிணைத்த ஒரு திரைப்படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மேலும் ஒரு சிறந்த நடிகர் இணையவுள்ளார்.
RRR படத்தின் மூலம் மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகரான எட்வர்ட் சோனன்பலிக் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவலை இந்த படத்தை தயாரித்து வெளியிடும் சத்திய ஜோதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. கேப்டன் மில்லர் என்பவர் பிரபாகரன் படையில் இருந்த விடுதலை புலிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கதைக்களம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.