தேவையில்லாமல் யாரும் எங்க நாட்டுக்கு வராதீங்க.. அதிரடி காட்டிய அரசாங்கம்..!

குடிமக்களை பார்த்து தேவையில்லாமல் எங்க நாட்டுக்கு யாரும் வர வேண்டாம் என்று ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, மற்றும் செக் குடியரசு நாடுகள் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அவசர வேலைக்காக மற்ற நாடுகளில் இருந்து வருவோர் யாராக இருந்தாலும் ஜெர்மனிக்குள் நுழைவதற்கு முன் 48 மணி நேர கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆவணத்துடன் வர வேண்டும் என்று ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்னொரு சட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கொரோனா இல்லை என்ற ஆவணத்துடன் வந்தால் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisement

அப்படி ஆவணத்துடன் வந்தாலும் 10 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏன் இந்த விதிமுறை; அங்கு மூன்றாவது கொரோனா அலை வீச தொடங்கியுள்ளது.

ஒரு நாளைக்கு மட்டும் 100,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றன. இதனால் தான் இந்த மாதிரியான விதிமுறை என்று Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lother H. Wieler தெரிவித்துள்ளார்.