ஆட்டோ டெபிட்.. வங்கி கணக்கிலிருந்து காசு எடுக்குறாங்களா..? ரிசர்வ் பேங்கின் அதிரடி மாற்றங்கள்

டிஜிட்டல் உலகத்தில் நாம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் சுலபமாக மாறிவிட்டது. அந்த வகையில் நாம் ஒவ்வொரு மாதமும் ஓடிடி, டிவி, டெலிபோன், இண்டர்நெட், போன்ற கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் கட்டி வருகின்றோம்.

சிலர் நாம் கட்டணம் கட்ட மறந்துவிடுவோம் என்று தனது வங்கி கணக்கில் இருந்து ஆட்டோ  டெபிட் கொடுத்து விடுகின்றனர். அது தானாக அவர்களுடைய கணக்கில் மாதந்தோறும் பணத்தை எடுத்து விடுகிறது.

இதனால் பல மோசடி நடக்கின்றது என்று பல புகார்கள் எழுந்தது. அதனை தடுக்கும் விதமாக மத்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது.

அந்த புதிய விதிகளின் படி வாடிக்கையாளர்களின் பணம் ஆட்டோ டெபிட் செய்வதாக இருந்தால் அந்த வங்கி 24 மணி நேரத்திற்கு முன்பு வாடிக்கையாளருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர் அனுமதி அளித்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் நடக்க வேண்டும்.

Advertisement

தனியாங்கி முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் அனைத்திலும் வாடிக்கையாளரின் அனுமதி பெற வேண்டும். ரூ. 5 ஆயிரத்திற்கு மேல் தனியாங்கி டெபிட் செய்தால் வாடிக்கையாளருக்கு ஓ.டி.பி அனுப்ப வேண்டும். இதனால் ஆன்லைன் மோசடி தவிர்க்கப்படும்.

என்று மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடமுறைக்கு வருகிறது.