பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்..! இன்னொரு குண்டை போட்ட சீனா..!

சீனாவின் வூகான் என்ற பகுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர்.

மேலும், கோடிக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சில முயற்சிகளில் ஆங்காங்கே முதற்கட்ட வெற்றிகளும் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், சீனா விஞ்ஞானிகள் புதிய குண்டு ஒன்றை போட்டுள்ளனர். அதாவது, பன்றிகளில் இருந்து புதிய வகை வைரஸ் ஒன்று உருவாகி வருகிறது என்று சீனா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Advertisement

இதுதொடர்பான தகவல், அமெரிக்காவின் தேசிய அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ், தொற்று நோயை தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது மரபணு ரீதியாக எச்1என்1 வைரசிடம் இருந்து வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பன்றிகளிடம் சோதனை மேற்கொண்டதில், ஜி4 வைரசால் பன்றிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.