அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த ஷாக்

அதிமுக அரசு ரத்து செய்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளை தற்போது திமுக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து மீண்டும் 58ஆக மாற்ற போவதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தது. அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக அதிகரித்தது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்பட வேண்டும். அதை வழங்க போதிய நிதி இல்லாத காரணத்தால் ஓய்வுபெறும் வயதையே ஓர் ஆண்டு நீட்டித்தது அதிமுக அரசு.

ஓய்வு பெறும் வயதை இரு ஆண்டுகள் உயர்த்தியதால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தடை படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்க திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது செட்டில்மெண்ட் தொகையை பணமாக அல்லாமல், இரு ஆண்டுகள் கழித்து பெற்று கொள்ளும் வகையில் பாண்ட் பத்திரமாக கொடுக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement