நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவருக்கு இவ்வளவு சம்பளமா..? சுவாரசிய தகவல்..!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று நிர்பயா கற்பழிப்பு சம்பவம். இந்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டு, கடந்த 7 வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதில், ஒருவர் விசாரணை நடந்துக்கொண்டிருக்கும்போது சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மேலும் ஒருவர் 18-வயதுக்கு கீழே உள்ளவர் என்பதால், அவர் 3 வருடங்களுக்குப்பின் விடுதலையானார்.

மீதமிருக்கும் 4 பேருக்கும் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஊழியருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அதன்படி, ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 4 பேருக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனநல ஆலோசனையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.