Search
Search

தமிழகத்தில் இனி மின்தடை கிடையாது – அமைச்சர் செந்தில் பாலாஜி

today tamil news

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்கட்டணம் குறித்து பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் மின் கட்டண குளறுபடி குறித்து இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த கூடுதல் கட்டணம் கழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய மின் திட்டங்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

கடந்த 19-ந்தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

You May Also Like