இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா?

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் அனைக்கட்டு ஒன்றியத்தில் ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை, பாலாம்பட்டு ஆகிய மூன்று கிராமங்களில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபட்டது. அதில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த கிராம மக்கள் காய்கறிகள் வாங்க வாரம் ஒருமுறை மட்டுமே வெளியே வருகின்றனர். தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் மலையை விட்டு கீழே வருவதில்லை.

இயற்கையான காற்று, இயற்கையான சூழல், இயற்கையான உணவுகள் இதுதான் இவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.