நீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலைகள் கொரோனா ஊரடங்கு தளர்வு செய்து திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன் பிறகு திரையுலகினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படுவது ஆபத்தான ஒரு செயலாகும். ஒரு சினிமாக்காரி ஆக நான் சிந்திக்கவில்லை. நாம் தற்போது ’கொரோனா வைரஸ்’ என்றும் ’சீனா வைரஸ்’ என்றும் அழைக்கின்றோம். இந்த அறிவிப்பால் ’சினிமா வைரஸ்’ என்ற கெட்ட பெயரை நாம் எடுக்க வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆபத்தான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வரையும் ஹீரோக்கள் மற்றும் திரையுலகிலகினர்களையும் நடிகை கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்று போட்டுள்ளார். அதில் “நீங்கள் தியேட்டருக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவிவிடும் என்று கவலைப்பட்டால் தயவுசெய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்கள் பயம் புரிந்து கொள்ளக்கூடியது தான். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு அழைத்து கட்டாயப்படுத்தவில்லை. உங்களை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளனர்.”

இந்த பதிவுகளால் ட்விட்டர் வாசிகள் ஒரு சிலர் நடிகை கஸ்தூரியின் கருத்தை ஏற்றும் ஒரு சிலர் நடிகை குஷ்பூ வின் கருத்தை வரவேற்றும் வருகிறார்கள்.