ஹஜ் புனித யாத்திரை இல்லை.. – மத்திய அமைச்சர் பேட்டி

ஜுலை மாத தொடக்கத்தில், இசுலாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வது வழக்கம்.

ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், புனித யாத்திரைக்கு போக முடியுமா..? முடியாதா..? என்று அனைவரும் நினைத்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

அதில், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும், யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.